close
Choose your channels

சூப்பர்ஹிட் 'கேஜிஎப் 2': யாஷ் உள்பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்தாலும் ரூபாய் 700 கோடிக்கு மேல் வசூல் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றி அடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை

தற்போது உலகம் முழுவதும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகாலம் தங்களது உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இந்த சம்பவத்திற்காக பெற்ற சம்பளத் தொகையை பார்க்கும்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

‘கேஜிஎப் 2’ திரைப்படத்தில் நடித்த யாஷ் உள்பட இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

யாஷ்: ரூ.27 கோடி

சஞ்சய் தத்: ரூ.10 கோடி

ரவீனா டண்டன்: ரூ.2 கோடி

ஸ்ரீந்தி ஷெட்டி: 4 கோடி

பிரகாஷ்ராஜ்: ரூ.82 லட்சம்

அனந்த்நாக்: ரூ.52 லட்சம்

மாளவிகா அவினாஷ்: 62 லட்சம்

இயக்குனர் பிரசாந்த் நீல்: 20 கோடி

மேற்கண்ட கணக்கின்படி முக்கிய நடிகர்களின் சம்பளம் சுமார் 65 கோடி தான் வருகின்றது. மற்ற டெக்னீஷியன், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு செலவு என பார்த்தாலும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி தான். ஆனால் இந்த படம் பட்ஜெட்டை விட சுமார் ஏழு மடங்கு வசூல் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.