close
Choose your channels

அஜித் இன்னும் நடிக்கின்றாரா? பிரபல நடிகையின் கேள்வியால் பரபரப்பு

Monday, March 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரவிந்த்சாமியுடன் 'என் சுவாச காற்றே', விஜய்யுடன் 'நெஞ்சினிலே', விஜயகாந்துடன் 'நரசிம்மா' போன்ற தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா கோபிகர் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'சிவகார்த்திகேயன் இளவயது ரஜினியை ஞாபகப்படுத்துவதாக கூறியிருந்தார். மேலும் என்னுடன் நடித்த நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அரவிந்த் சாமி எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்' என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அஜித் குறித்த கேள்விக்கு 'எனக்கு அஜித்தைப் பிடிக்கும். ஆனால் அவர் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது' என்று கூறியுள்ளார். அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் வெற்றி குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவர் நடித்து கொண்டிருப்பதே தனக்கு தெரியாது என்று இஷா கோபிகர் கூறியிருந்தது அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. இதுகுறித்து அஜித் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.