close
Choose your channels

முன்னாடி மாதிரியெல்லாம் கிடையாது, இந்துக்கள் முழித்துவிட்டார்கள்: ஜாகுவார் தங்கம்

Wednesday, July 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் குறித்து ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அவர்கள் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

கருப்பர் கூட்டம் குழுவினர் புரிந்து பேசுகிறார்களா? புரியாமல் பேசுகிறார்களா? என்பது தெரியவில்லை. மின்சாரம் கண்ணுக்கு தெரியாது. தொட்டால் தான் தெரியும். அதை போல் தமிழில் சில வார்த்தைகள் உண்டு. அந்த வார்த்தைகளுக்கு உயிர் உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அந்த நேரத்தில் முருகன் கனவில் தோன்றி அவரை குணப்படுத்தினார். அதன் பின்னர் அவர் பாடியதுதான் கந்த சஷ்டி கவசம். இதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஒருவருடைய அம்மாவிடம் நீ எப்படி பிறந்தாய் என்று கேட்டால், அம்மா வயிற்றில் இருந்து பிறந்தார் என்றுதான் கூறுவார்கள். அம்மா என்ன நீ பிறந்தாய் என்று யாருமே கேட்பதில்லை. எல்லாருக்குமே அது தெரியும். ஆனால் நாகரீகம் கருதி அதனை யாரும் கேட்க மாட்டார்கள். இதுவரை யாரும் அவ்வாறு கேட்டதும் இல்லை

நான் யோகாசனம் செய்கிறேன் என்றால் ஒவ்வொரு உறுப்பும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்வேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் யோகாசனம் செய்யும் ஒவ்வொருவரும் அவ்வாறு வேண்டிக் கொள்வார்கள். சாந்தி ஆசனம் என்று ஒன்று இருக்கின்றது. உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரைக்கும் சாந்தி செய்வது அந்த ஆசனத்தின் குறிக்கோள் ஆகும். அதை தவறு என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்? இதை ஒரு பெரிய குற்றம் போல் பேசி இருப்பது ரொம்ப தவறு

நீங்கள் ஒரு இந்துவா? எதற்காக நீங்கள் இதுகுறித்து பேசுகிறீர்கள்? முன்னர் செருப்பு மாலை போட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது. இனிமேல் அதுமாதிரி யாரும் செய்ய முடியாது. பெரியார் சிலைக்கு சாயம் பூசியவர் தைரியமாக சரண்டர் ஆனார். ஆனால் நீங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள். தைரியமாக சரண்டர் ஆக வேண்டியது தானே. நீங்கள் என்ன உண்மையான நபரா? எங்கள் சாமியை எப்படி விமர்சனம் செய்யலாம்? எங்கள் மதம் குறித்து அவதூறாக கூறி எங்கள் மனதை புண்படுத்த கூடாது. அப்படியே பேசினால் இனிமேல் யாரும் விடமாட்டோம். ஏனெனில் இந்துக்கள் முழித்து கொண்டார்கள் என்று ஜாக்குவார்தங்கம் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.