close
Choose your channels

காங்கிரஸ் கட்சியில் இணையும் 'ஜெயிலர்', 'கேப்டன் மில்லர்' பட நடிகரின் மனைவி..!

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’, தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். இவரது மனைவி கீதா இன்று காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் பரபரப்பாக உள்ளன. இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாரின் மனைவி கீதா இன்று காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும், இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவராஜ் குமாரின் மனைவி கீதா முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பாவின் மகள் என்பதும் ஜேடிஎஸ் என்ற கட்சியில் இருந்து வந்த இவர் சமீபத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இன்று சிவராஜ்குமார் மனைவி கீதா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரர் உள்பட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார் காங்கிரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய இருப்பது அக்கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட திரையுலகின் இன்னொரு பிரபல நடிகர் சுதீப், பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளது கன்னடத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.