close
Choose your channels

நயன்தாராவின் 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Friday, September 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்த ’இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஜெயம் ரவி நடித்த ’ஆதிபகவன்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சான்றிதழ் படமாக ’இறைவன்’ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அதிக வன்முறை, ரத்த வெள்ள காட்சி, மற்றும் சில கொலை காட்சிகள் இருப்பதால் தான் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பது ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகிய இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 153 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 33 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றாலும் இந்த படம் வசூலில் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.