close
Choose your channels

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் இன்னொரு டைட்டில்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் தெலுங்கு மாநிலங்களிலும் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு ’GOD’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் சென்சார் ஆன நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியின் திரைப்படம் ’ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த படம் ஜெயம் ரவி மற்றும் நயன்தாராவின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.