close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 'ஜகமே தந்திரம்' நடிகர்.. !

Thursday, April 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஏற்கனவே சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உட்பட பல நடிகர்களும், த்ரிஷா, பிரியா ஆனந்த் உட்பட சில நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இவர் தற்போது நடைபெறும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.