close
Choose your channels

மாமதுரை அன்னக்கொடி.. வா மதினி அண்ணன் ரெடி.. 'ஜிகர்தண்டா 2' பாடல் ரிலீஸ்..!

Monday, October 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்த ‘ஜிகர்தண்டா 2’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘மாமதுரை’ என்று தொடங்கும் என்ற பாடலை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய அவரது மகள் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். விவேக் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த பாடலில் ராகவா லாரன்ஸ் செம டான்ஸ் ஆடியுள்ளார் என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக குக் வித் கோமாளி புகழ் பாபா பாஸ்கர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணையத்தில் ஹிட் ஆகி வருகிறது. இந்த பாடலில் இடம் பெற்ற முதல் சில வரிகள் இதோ:

மாமதுரை அன்னக்கொடி
வா மதினி அண்ணன் ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதி நல்லா கொட்டு அடி

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படம் திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.