close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'KIK'இல் இணைந்த ஜீவா

Tuesday, October 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் வெற்றி பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கடவுள் இருக்கான் குமாரு. 'KIK' என்று அழைக்கப்படும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் எம்.ராஜேஷ் படம் என்றாலே கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பிரபல நடிகர் வருவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜீவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.