close
Choose your channels

ஒரு கையில் குழந்தை.. இன்னொரு பக்கம் கணவருக்கு முத்தம். . பூஜா ராமச்சந்திரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜான் கோகைன் மற்றும் நடிகை பூஜா ராமச்சந்திரன் ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இருவரும் எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பா. ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ அஜித் நடித்த ’துணிவு’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் ஜான் கோகைன். இவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜான் கோகைன் - பூஜா ராமச்சந்திரன் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தை பிறந்த அறிவிப்பை இருவரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தனர்

இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து 4 மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் குழந்தையுடன் கூடிய புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். மிகவும் ஜாலியான மூடில் எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் ஒரு கையில் குழந்தையை வைத்திருக்கும் பூஜா ராமச்சந்திரன் இன்னொரு பக்கம் கணவருக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.