close
Choose your channels

டாக்குமெண்ட்ரி பிலிம் இயக்குகிறார் ஜோதிகா

Wednesday, October 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்து வரும் படம் 'மகளிர் மட்டும்' என்பது அனைவரும் அறிந்ததே.
கமல்ஹாசன் தயாரித்த படத்தின் தலைப்பை கொண்ட இந்த படத்தை 'குற்றம் கடிதல்' பட இயக்குனர் பிரம்மா இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தில் ஜோதிகா, டாக்குமெண்ட்ரி பிலிம் இயக்கும் இயக்குனராக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.