close
Choose your channels

ஒரு நயாபைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடிய காஜல் அகர்வால்!

Sunday, December 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மாலத்தீவில் அவர் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

மேலும் காஜல் அகர்வால் மாலத்தீவில் விலையுயர்ந்த ஹோட்டலில் குறிப்பாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்ததாகவும் இதற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வந்துள்ள செய்திகளின்படி இந்த காஜல் அகர்வால் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் தனது தேனிலவை முடித்து கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மாலத்தீவை பொறுத்தவரை அங்குள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை வழங்கியுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீவுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும் 10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என்றும் நாம் நமக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து வந்தால் போதும் எதற்கும் பணம் செலுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வாலுக்கு 16.3 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் அவர் தனது கணவருடன் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் தேனிலவை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காஜல் அகர்வால் மட்டுமின்றி சமந்தா, ப்ரணிதா சுபாஷ், வேதிகா உள்பட பலர் மாலத்தீவு சென்றுள்ளதும் இந்த சலுகையின் அடிப்படையில் தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்கள் மாலத்தீவில் உள்ள இயற்கை அழகிய காட்சிகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளதால் மேற்கண்ட நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாலத்தீவின் சுற்றுலா பகுதிகள் உலகம் முழுவதும் பரவி சுற்றுலா பயணிகளை பயணிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.