close
Choose your channels

கமல்-எச் வினோத் படத்திற்கு இன்னும் உயிர் இருக்குதா? புதிய தகவல்..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து, தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தனது சமூக வலைதள பக்கத்தில் தான் தயாரித்து வரும் திரைப்படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்ட நிலையில் அந்த பட்டியலில் இந்த படம் இல்லை என்பதால் இந்த படம் ட்ராப் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

கமல்ஹாசன் ஏற்கனவே சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் எச் வினோத் படத்திற்கு கால்சீட் தர முடியவில்லை என்றும் அதனால் இந்த படம் ட்ராப் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படம் டிராப் இல்லை என்றும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல், எச் வினோத் இணையும் ’கமல்ஹாசன் 233’ படம் கைவிடப்படவில்லை என்றும் வேறு ஒரு நேரத்தில் நிச்சயம் படமாக்கப்படும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலையை ராஜ்கமல் நிறுவனம் எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சில ஆண்டுகள் கழித்து கமல் எச் வினோத் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது எச் வினோத், தனுஷ் நடிக்கும் படம் ஒன்றையும், யோகி பாபு படம் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் கார்த்தி நடிக்கும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். அதன் பின் கமல் படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.