close
Choose your channels

'கமல் 233' படப்பிடிப்பு எப்போது? திரைக்கதையில் மாற்றம் செய்யும் எச்.வினோத்..!

Wednesday, June 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 233 வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் ’கமல் 233’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை முழுவதும் எச்.வினோத் தயார் செய்து கமல்ஹாசனிடம் காட்டிய போது அதில் சில மாற்றங்கள் செய்ய கமல் அறிவுறுத்தியதாகவும் அந்த மாற்றத்தை செய்யும் பணியில் தற்போது அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் லொகேஷன் பார்க்க ஒரு குழு சென்று இருப்பதாகவும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எச் வினோத்தின் முந்தைய படங்கள் போலவே இந்த படத்திலும் ஒரு முக்கிய சமூக கருத்து அடங்கி இருப்பதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.