close
Choose your channels

பிக்பாஸ் நடிகைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய கமல்

Wednesday, December 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜா சமீபத்தில் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் தான் கண்டிப்பாக கலந்து கொள்வதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் கஜா புயல் ஆய்வு குறித்த பணிகளில் பிசியாக இருந்த கமல்ஹாசனால் சுஜா திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் சுஜாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற சுஜா-சிவகுமார் தம்பதிக்கு இன்று அவர் மதிய விருந்தளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது தனக்கு தந்தை இல்லை என்றும், கமல்ஹாசனை தனது தந்தை வடிவத்தில் பார்ப்பதாகவும் சுஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.