close
Choose your channels

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

Sunday, November 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

நடிகர் கமல்ஹாஸன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' கமல்ஹாஸன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முதல்வரின் இந்த வார்த்தைக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது: இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான முக ஸ்டாலின்ப் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.