close
Choose your channels

நாடாளுமன்ற தேர்தல்: கமல் கட்சிக்கு என்ன சின்னம்?

Wednesday, December 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்றும், நானும் போட்டியிடுவேன் என்றும் கமல் சமீபத்தில் அறிவித்தார். ஆனால் தேர்தல் கமிஷனில் தனது ஏற்கனவே கட்சியை பதிவு செய்துள்ள கமல், இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்கள் கட்சிக்கான சின்னம் குறித்து இன்னும் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியபோது, 'நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் கேட்டு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்திடம் இருந்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜிகே வாசனின் தமாகா கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் தினகரன் கட்சியும் தங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான 'தொப்பி' சின்னத்தையே மீண்டும் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.