close
Choose your channels

கார்த்திக்-கெளதம் கார்த்திக் படத்தில் கமல்ஹாசன்

Friday, February 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 'முத்துராமலிங்கம்'. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோ அறிமுகமாகும்போது ஒரு கம்பீரமான பாடலை வைத்துள்ள இயக்குனர் ராஜதுரை, இந்த பாடலை பயமறியாத ஒரு குரலில் உருவாக வேண்டும் என்று முடிவு செய்தார். எஸ்.பி.பி. பாடினால் நன்றாக இருக்கும் இயக்குனர் முடிவு செய்த நிலையில், இந்த பாடலை கமல் பாடினால் பொருத்தமாக இருக்கும் என இளையராஜா பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனும் இதற்கு ஒப்புக்கொள்ள சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 'தெற்கு தேச சிங்கமடா' என்று தொடங்கும் இந்த பாடலை கமல்ஹாசன் ஒரே மணி நேரத்தில் பாடி முடித்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த பாடலை பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.