close
Choose your channels

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் தந்தை-மகள் படங்கள்

Thursday, October 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 'தல' அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படமும் அதே தினத்தில்தான் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கமல், அஜீத் படங்களுக்கு இடையே போட்டியா? என ஒருவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒரு அபூர்வ ஒற்றுமை இந்த படங்களின் ரிலீஸ்களில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்திய திரையுலகில் இதுவரை தந்தை, மகள் ஆகியோர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது இல்லை என்றும் முதல்முறையாக தந்தை கமல் நடித்த 'தூங்காவனம்' திரைப்படமும், மகள் ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்காவனம் திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று அல்லது நாளை 'வேதாளம்' திரைப்படம் சென்சார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.