close
Choose your channels

20 கோடி பட்ஜெட், 400 கோடி வசூல்.. வெற்றின்னா இப்படித்தான் இருக்கணும்!

Wednesday, November 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சில கோடிகள் மட்டுமே லாபங்கள் பெறும் படங்கள் இருக்கும் மத்தியில் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய திரையுலகையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கர்நாடகாவில் ரூ.168.50 கோடியும், ஆந்திரா தெலுங்கானாவில் ரூ.60 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.12.70 கோடியும், கேரளாவில் ரூ.19.20 கோடியும், வட இந்தியாவில் ரூ.96 கோடியும் உலக நாடுகளில் ரூ.44.50 கோடியும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜெட் மற்றும் புரமோஷன் செலவுகள் ஆகியவை சேர்த்து 20 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்ட இந்த படம் 20 மடங்கு வசூல் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி என்றால் இதுதான் உண்மையான வெற்றி படம் என திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ரூபாய் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் ஓடிடியிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.