close
Choose your channels

கார்த்தி அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? இயக்குனர் நலன் குமாரசாமி திட்டம்..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ’ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் எம்ஜிஆர் படம் தொடர்பாக டைட்டில் தான் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த வருடத்திற்கு ’ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ‘வா வாத்தியாரே’ என்ற டைட்டில்கள் வைக்கப்படலாம் என்று செய்திகள் கசிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ‘வா வாத்தியாரே’ டைட்டில் தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.