close
Choose your channels

விஜய் இடத்தை பிடித்த விஷால்-கார்த்தி

Tuesday, October 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரபுதேவா என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது இளையதளபதியின் 'போக்கிரி' தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரபுதேவா மீண்டும் தமிழில் படம் இயக்கினால் அந்த படத்தில் விஜய்தான் ஹீரோ என கோலிவுட்டில் கூறப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக பிரபுதேவா இயக்கவுள்ள புதிய படத்தில் விஷாலும் கார்த்தியும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.