close
Choose your channels

ஆண்டவனின் அதிசய படைப்பில் அவன் ஒரு ஹீரோ.. 'ஜப்பான்' இண்ட்ரோ வீடியோ..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து முடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது குறித்த போஸ்டர் வைரலானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கார்த்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ‘ஜப்பான்’ படத்தின் இண்ட்ரோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கார்த்தியின் கேரக்டர் மற்றும் அவரது மாஸ் காட்சிகள் உள்ளன என்பதும் கார்த்தியின் ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆண்டவனை அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ’ மற்றும் ‘நீங்க நினைக்கிற மாதிரி இல்லம் அவன் ஒரு டர்ட்டி வில்லன்’ போன்ற வசனங்கள் கார்த்தியின் கேரக்டரை பில்டப் செய்கின்றன. இயக்குனர் ராஜூ முருகனின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.