close
Choose your channels

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கார்த்தி படம்.. 3 படங்கள் மோதலா?

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே தீபாவளி தினத்தன்று இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ஆக கார்த்தி படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கார்த்தியின் பிறந்த நாளான இன்று அவர் நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப் போவதாக புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கார்த்தியின் ‘ஜப்பான்’ சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா ஆகிய மூன்று படங்கள் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ மற்றும் கார்த்திக் நடித்த ’சர்தார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது என்பதும் இதில் ’சர்தார்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’பிரின்ஸ்’ எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸில் வின்னர் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.