உலகப்புகழ் பெற்ற WWE வீரரை சந்தித்த நடிகர் கார்த்தி.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகப் புகழ்பெற்ற குறிப்பாக இந்திய ரசிகர்களிடம் பிரபலமான WWE வீரர் ஜான்சேனாவை நடிகர் கார்த்தி சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’
ஹைதராபாத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ஸ்பெக்கடல் என்ற மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த போட்டி தான் இந்தியாவில் நடைபெறும் முதல் WWE மல்யுத்த போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.இதில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் உலகப் புகழ்பெற்ற ஜான்சேனாவும் கலந்து கொண்டார். இவர் 6 முறை WWE பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜான் சேனாவை நடிகர் கார்த்தி சந்தித்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’ஜான் சேனா உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி, இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் அற்புதமாக உணர வைத்துள்ளீர்கள்” என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே நடிகர் கார்த்தி கெவின் மற்றும் சமி ஜென் ஆகிய இரண்டு WWE வீரர்களை சந்தித்த புகைப்படம் நேற்று வைரலானது என்பதை பார்த்தோம்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments