close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு.. 'கைதி' போலவே ஒரு ட்விஸ்ட்..!

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் தான் கார்த்தி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கும்பகோணத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் இந்த படத்தின் படப்பிடிப்பை 85 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியே இல்லை என்பதும், ஏற்கனவே அவர் ’கைதி’ படத்தில் ஜோடி இல்லாமல் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேம்குமார் இயக்கத்தில், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் இந்த படம் உருவாக உள்ளது. கோவிந்த் வசந்தா மற்றும் மகேந்திரன் ஜெயராஜ் ஆகிய இருவரும் பிரேம்குமாரின் ’96’ படத்திலும் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.