close
Choose your channels

என் வாழ்நாள் முழுவதும் இதுவொரு குறையாக இருக்கும்: நடிகர் கார்த்தி வருத்தம்..!

Thursday, January 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது என் வாழ்நாள் முழுவதும் ஒரு மனக்குறையாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி பேட்டி அளித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த நிலையில் அவரது நினைவிடத்திற்கு வந்து சிவக்குமார் மற்றும் கார்த்தி இன்று அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கார்த்தி செய்தியாளர்களிடம் பேசிய போது ’கேப்டன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாதது எனது வாழ்நாள் முழுவதும் மனக்குறையாக இருக்கும். அவர் இப்போது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவர் வீட்டில் எப்போதும் சாப்பாடு போட்டு கொண்டே இருப்பார்கள். அவரது படங்கள் ரொம்ப பிடிக்கும், குறிப்பாக அவர் போலீசாக நடித்திருந்தால் அந்த படத்தை விடாமல் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

நான் நடிக்க வந்த பிறகு, நடிகர் சங்கத்திற்கு வந்த பிறகு, தேர்தலில் ஜெயித்த பிறகு கேப்டன் அவர்களை பார்த்தபோது மிகவும் சந்தோஷமாக என்னிடம் பேசினார். சங்கத்தில் நாங்கள் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரைத்தான் நாங்கள் நினைத்துக் கொள்வோம்.

ஒரு தலைவர் என்றால் முன்னாடி நின்று வழி நடத்த வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை அவரைப் பார்த்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம். விஜயகாந்தின் கொள்கையை நாங்களும் கடைபிடித்து வருகிறோம். அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை, நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம். எங்கள் மனதில் அவரை எப்போதும் இருப்பார்.

வரும் 19ஆம் தேதி நடிகர் சங்கத்தில் இருந்து அவருக்காக இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் அவருடைய புகழ் எப்போதும் நிலைக்கும் வகையில் நடிகர் சங்கம் மூலம், அரசுக்கு கோரிக்கைக வைப்பதன் மூலம் நாங்கள் செய்வோம்.

கேப்டன் உடைய புகழ் எப்போதும் இருக்க வேண்டும், அவர் நிறைய அன்பு கொடுத்து இருக்கிறார், அந்த அன்பு எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos