close
Choose your channels

'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகலா? உறுதி செய்யும் புகைப்படம்!

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகி விட்டதாகவும் தற்போது தனுஷ் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகிய இருவருமே படத்தை இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது 'D43' படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கார்த்திக் நரேன் தனுஷுக்கு காட்சியை விளக்கும் காட்சி உள்ளது. இந்த புகைப்படம் கார்த்திக் நரேன் 'D43' படத்தில் இருந்து விலகவில்லை என்பதை உறுதி செய்கிறது என்பதும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கும் இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர்களான சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர் திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.