close
Choose your channels

கவுதம் மேனன் கன்னத்தில் ஓங்கி அறைந்த பாரதிராஜா.. 'கருமேகங்கள் கலைகின்றன' ஸ்னீக்பீக் வீடியோ..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தில் பாரதிராஜா நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுகிறார் அப்போது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் போது அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒருவர் மட்டும் நீங்கள் என்னை நீதிபதியாக இருந்து சிறைக்கு தள்ளினீர்கள், ஆனால் உங்கள் மகன் என்னை வெளியே கொண்டு வந்து விட்டார் என்று கௌதம் மேனனை பார்த்து கூறிய அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறார்

இதனால் தந்தை மகனான பாரதிராஜா மற்றும் கௌதம் மேனன் இடையே சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் கௌதம் மேனன் கன்னத்தில் பாரதிராஜா ஓங்கி அறையும் காட்சி கொண்ட ஸ்னீக்பீக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் தங்கர்பச்சான் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் மேனன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.