close
Choose your channels

திரைப்படமாகிறது தங்கமங்கை வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது. எம்.எஸ்.தோனி, மேரிகோம், சச்சின், உள்பட பல விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் தற்போது தடகள போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து தங்கங்களை வென்று குவித்த பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ரேவதி வர்மாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் பி.டி.உஷாவின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இயக்குனர் ரேவதி, காத்ரினா கைஃபை சந்தித்து இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க காத்ரினா கைஃப் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.