close
Choose your channels

உலகம் முழுவதும் 'அயலான்' வசூல் செய்த தொகை இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, January 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் நான்கே நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகி உள்ள நிலையில் மீண்டும் உலகம் முழுவதும் வசூல் செய்த தொகையை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ’அயலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன.

சமீபத்தில் ’அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.