close
Choose your channels

உலகிலேயே இவர்தான் மோசமானவர்: பிரபல இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் பிரபல இயக்குனர் ஒருவர் குறித்து தனது ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த உலகத்திலேயே மோசமான ஒருவர் என்றால் அவர் கொரடலா சிவா தான். என் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருக்கு கண்டிப்பாக ஒரு முக்கிய பங்கு உண்டு. நான் தூங்கினாலும், விழித்திருந்தாலும் இந்த ஒரு பெயரை மட்டும் மறக்கவே மாட்டேன்' என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

மேலும் பூலான் தேவி புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, 'பாகிஸ்தான் தீவிரவாதிகள் மட்டும் தீவிரவாதிகள் அல்ல, உள்ளூரிலும் பல தீவிரவாதிகள் உள்ளனர் என்று கூறி எத்தனை பேர் நான் பூலான் தேவி குறித்த படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.