close
Choose your channels

தனுஷ்-பிரபுசாலமன் படப்பிடிப்பின் முக்கிய விபரம்

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து முடித்துள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, 'பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. பிரபுசாலமனின் இயக்கத்தில் நடித்தது உண்மையிலேயே புதுவித அனுபவமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஓடும் ரயிலில் படமாக்கப்பட்டுள்ளதாகவும், தனுஷ் இந்த படத்தில் சமையல்காரராக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்முறையாக தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் காமெடி கேரக்டரில் கருணாகரன் நடித்துள்ளார்

பிரபுசாலமன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனுஷ் விரைவில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து வெற்றிமாறனின் 'வடசென்னை' படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.