close
Choose your channels

விஜய் சம்பளம் இருக்கட்டும்.. 'லியோ' படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Thursday, October 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆயுத பூஜை நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது

இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்த சஞ்சய் தத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இன்னொரு வில்லனாக நடித்த ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், உள்ளிட்டவர்களுக்கு 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் சம்பளம் எவ்வளவு என்பதை குறித்த தகவல் இல்லை என்றாலும் அவருக்கும் மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.