close
Choose your channels

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்.. பிறந்தநாள் வாழ்த்தில் ட்விஸ்ட்..!

Thursday, March 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் ’எங்கள் இயக்குனர்’ என்றும் ’அவர் கதை சொன்ன விதம் எங்களை ஆச்சரியப்படுத்தியது’ என்றும் கூறியுள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை இந்நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

‘மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய ஐந்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அடுத்து அவர் ’கைதி 2’ ‘ரோலக்ஸ்’ ‘விக்ரம் 2’ உள்ளிட்ட படங்களை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கேவிஎன் என்ற நிறுவனம் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ‘எங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் கதை சொன்ன விதம் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை இந்த நிறுவனம்தான் இயக்க உள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அனேகமாக பிரபாஸ், லோகேஷ் இருவரும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.