close
Choose your channels

மாதவன் - ஜோதிகா படத்தின் டீசர் வெளியீடு.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த ஹிந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதோடு இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

அஜய் தேவ்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ’சைத்தான்’. இந்த படத்தில் மாதவன், ஜோதிகா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாதவன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ’டும் டும் டும்’ என்ற படத்தில் நடித்த பிறகு தற்போது தான் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை ஜோதிகா 1997 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதன் பிறகு தற்போது தான் மீண்டும் இந்தி திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரிலிருந்து இந்த படம் ஒரு திரில் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விகாஸ் பால் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.