close
Choose your channels

ரஜினி, கமல் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தது, நான் தான் நடிக்கல... மதுவந்தி

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பெரிய நடிகர்களிடம் இருந்து நடிக்க எனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் நான் தான் நடிக்கவில்லை என பிரபல காமெடி நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி தெரிவித்துள்ளார் .

நடிகையும் நடன கலைஞருமான மதுவந்தி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ படத்தில் இடம்பெற்ற மீனா நடித்த ரங்கநாயகி கேரக்டரில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது என்றும் ஆனால் என்னுடைய பாட்டி படிப்பு முடித்த பிறகுதான் நடிப்பு என்று கறாராகக் கூறி விட்டதால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இருந்து நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் படிப்பு காரணமாகத்தான் அந்த வாய்ப்பை தான் பயன்படுத்தவில்லை என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய பாட்டி கூறுவது தான் எங்கள் வீட்டின் எல்லாமே நடக்கும் என்றும் எங்கள் அப்பா அம்மா கூட பாட்டி சொல்லை மீற மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். நடிகை நடன கலைஞர் மதுவந்தியின் முழு பேட்டியின் வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.