close
Choose your channels

அஜித்துக்கு முந்தைய நாளை அழுத்தமாக பிடித்து கொண்ட முருகதாஸ்

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒவ்வொரு செய்தியும் வியாக்கிழமை செண்டிமெண்ட் உடன் வருவது அனைவரும் அறிந்தே. ஃபர்ஸ்ட்லுக், டீசர் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் வரை அனைத்துமே வியாழக்கிழமையே நடந்து வருகிறது. அஜித்தும், இயக்குனர் சிவாவும் சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமைக்கு முந்தைய நாள் புதன்கிழமையை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் குழுவினர் கடைபிடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் சிங்கிள் டிராக் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி புதன்கிழமை வெளிவரவுள்ளதாகவும், அதன் பின்னர் படம் ரீலீஸ் ஆகும் வரை வரும் ஒவ்வொரு புதன்கிழமையும் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒவ்வொரு சர்ப்ரைஸ் செய்திகளை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.