close
Choose your channels

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசா? நீச்சல் குள பிகினி போட்டோஷூட்டில் மாளவிகா மோகனன்..!

Sunday, August 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டும் இன்றி அவர் நடித்து வரும் ’தங்கலான்’ படத்தில் அவரது கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனுக்கு சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்று முன் அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அவர் தரும் பிறந்தநாள் பரிசாக பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் குவிந்து உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகன், ஒரு மலையாள படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.