close
Choose your channels

என்ன ஆச்சு மாளவிகா மோகனனுக்கு? ஒல்லிக்குச்சியாக மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் ஏற்கனவே ஸ்லிம்மாக இருந்த நிலையில் தற்போது மேலும் மெலிந்து ஒல்லிக்குச்சி போல் காணப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை மாளவிகா மோகன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் பதிவு செய்த புகைப்படங்களில் மிகவும் மெலிந்து ஒல்லிக்குச்சியாக காணப்பட்டதை அடுத்து ரசிகர்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படங்களுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.