close
Choose your channels

மணிகண்டனின் அடுத்த படம்.. சூப்பர் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Thursday, November 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய் பீம்’ திரைப்படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டன், சமீபத்தில் வெளியான ’குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மணிகண்டன், பிரபு வியாஸ் என்பவரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’லவ்வர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் ஜோடியாக கௌரி பிரியா ரெட்டி நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பதும் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் பரத் விக்ரமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.