close
Choose your channels

'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனர் என்னிடம் தவறாக நடந்தார்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு..!

Saturday, March 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்ததாக பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கேரளாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் நேற்று வெளியான தமிழ் படங்களை விட ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’படத்திற்கு தான் அதிக கூட்டம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஒரே படத்தால் தமிழகம், கேரளா மட்டுமின்றி இந்திய அளவிலும் மிகப்பெரிய புகழ்பெற்ற இயக்குனர் சிதம்பரம் மீது திடீரென இன்ஸ்டாகிராம் பிரபலமும் நடிகையுமான ப்ரிப்தி எலிசபெத் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் இயக்கிய முதல் திரைப்படமான ’Jan. E. Man’ என்ற படத்தில் அம்மு என்ற கேரக்டரில் ப்ரிப்தி எலிசபெத் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் தன்னிடம் இயக்குனர் தவறாக நடந்து இருப்பதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 3 வருடங்கள் கழித்து அதுவும் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்த பின், அவர் மீது எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு கூறுவது ஏன்? என்று அந்த நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் வரை காத்திருந்து அந்த இயக்குனர் மீது தற்போது குற்றச்சாட்டு கூறுவது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இயக்குனர் சிதம்பரம் மீது மூன்று வருடங்களுக்கு முன்பே குற்றச்சாட்டு கூறாதது ஏன்? காவல்துறையில் புகார் அளிக்காதது ஏன்? இப்போது அவர் பிரபலமான பிறகு அவர் மீது குற்றச்சாட்டு கூறுவது எந்த வகையில் நியாயம்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு நடிகையின் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.