close
Choose your channels

உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்: 'மாமன்னன்' டிரைலர்..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிய ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

‘நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன், என் வயிற்றில் இருந்து குடலை உருவி அதை தெருத்தெருவாக விட்டு வருவேன், உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்ற வடிவில் வசனத்துடன் இந்த டிரைலர் தொடங்குகிறது.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் ஆகியோர்களின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வடிவேலுவின் அபாரமான காட்சிகள் ஆகியவற்றுடன் மாரி செல்வராஜின் முந்தைய பட பாணியில் இந்த படத்தின் டிரைலர் உள்ளது. 3 நிமிடத்திற்கு மேலாக இருக்கும் இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியதால் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.