close
Choose your channels

அடுத்த வாரம் நம்மில் ஒருத்தர் கேப்டன் ஆனா, அது வேற கேம்.. மாயா ஆவேசம்..

Tuesday, October 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

அடுத்த வாரம் நம்மில் ஒருவர் கேப்டன் ஆனால் அதன் பிறகு வேற கேம் இருக்கு என்று மாயா ஆவேசமாக கூறுகிறார். அடுத்த வாரம் கண்டிப்பாக நம்மில் ஒருவர் தான் கேப்டன் ஆக வேண்டும் என்றும் அதன் பிறகு இதுக்கு வேடிக்கை என்றும் அவர் கூறுவதை விஷ்ணு, பிரதீப் ஆதரிக்கின்றனர்.

மேலும் திரும்ப திரும்ப மாயா, ‘ அடுத்த வாரம் கண்டிப்பாக நம்மில் ஒருவர் தான் கேப்டன் ஆகணும் என்று ஆணித்தரமாக சொல்வதை அடுத்து, அடுத்த வாரம் கேப்டன் பதவிக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள், பிக் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் என இரு அணியாக பிரிந்து ஒருவரை ஒருவர் விரோதத்துடன் பார்ப்படுவதால் இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த வாரம் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் மாயா, பிரதீப், விஷ்ணு ஆகியோர்களில் ஒருவர் அடுத்த வாரம் கேப்டன் ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.