close
Choose your channels

சீனாவிலும் மெர்சலாக காத்திருக்கும் விஜய் படம்

Friday, August 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் படம் என்றாலே தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதிலும், உலகின் பல நாடுகளிலும் வசூல் மழை பொழியும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் '3 இடியட்ஸ்', 'டங்கல்' மற்றும் பாகுபலி படங்களை அடுத்து விஜய் நடித்த 'மெர்சல்' படமும் சீனாவில் சீனமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது

இந்த படத்தின் சீன ரிலீஸ் உரிமையை ஹெச்.ஜி.சி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. சீன மொழி வசனங்கள் டப் செய்யும் பணி தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தை வெகுவிரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் ஹெச்.ஜி.சி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் லி யிங் கூறியுள்ளார்.

மருத்துவத்துறையில் முறைகேடு என்ற விஷயம் சீனர்களை கவரும் என்பதால் இந்த படம் டப் செய்யப்பட்டு வருவதாகவும், சீனாவில் இந்த படம் ஹிட்டானால் இந்த படத்தின் வசூல் இதுவரை இல்லாத வகையில் மிகபெரிய வசூலை பெற்ற விஜய் படம் என்ற பெருமையை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.