close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினை நிமிர வைத்த மோகன்லால்

Thursday, October 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும் திரைப்படம் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டு டைட்டிலுடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'நிமிர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பிரியர்தர்ஷன் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மூன்ஷாட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், , பார்வதி நாயர், நமீதா பிரமோத் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆன மலையாள திரைப்படமான 'மகேஷிண்டே பிரத்திகரம்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.