close
Choose your channels

நையப்புடை ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, February 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்த 'நையப்புடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


'நையப்புடை' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சற்று முன்னர் வெளிவந்துள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.சந்திரசேகருடன் பா.விஜய், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஜயகிரண் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் 70வயது ரிட்டையர்டு ராணுவ வீரராகவும், பா.விஜய் பத்திரிகையாளராகவும் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.