close
Choose your channels

நரகாசுரன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துருவங்கள் 16' என்ற சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அடுத்த படமாக 'நராகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கெளதம் மேனன் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் 41 நாட்களில் மிகச்சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளரின் பாராட்டுக்களை பெற்றார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 25ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை இணையதளங்களில் வெளியாகிறது. இந்த தகவலை தயாரிப்பாளர் கெளதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் டீசர் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்

அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.