close
Choose your channels

எஸ்.கே 16 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபலம்

Saturday, June 15, 2019 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் 'எஸ்கே 16' திரைப்படம் குறித்து சமீபத்தில் வெளிவந்த அறிவிப்பு குறித்த செய்தியை பார்த்தோம். இந்த படம் ஒரு தங்கை செண்டிமெண்ட் படம் என்பதால் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனாக தங்கையாக நடிக்க ஒப்பந்தமானார். 

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'சதுரங்க வேட்டை' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடிகராகவும், 'புலி' உள்பட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்த நட்டி நடராஜன் தான் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அனு இமானுவேல் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz