close
Choose your channels

கிரிக்கெட் திரைப்படத்தில் நயன்தாரா.. இரண்டு ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

Saturday, April 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தமிழில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வெளிவந்தாலும் தற்போது ’தி டெஸ்ட்’ என்ற டைட்டிலில் டெஸ்ட் கிரிக்கெட் சம்பந்தமான கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் நாயகர்களாக மாதவன் மற்றும் சித்தார்த் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் மாதவனுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்தை சஷிகாந்த் தயாரித்து இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.